» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் கட்சி மாநாடு மிகப்பெரிய வெற்றி: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

வியாழன் 31, அக்டோபர் 2024 4:09:39 PM (IST)



நடிகர் விஜயின்  அரசியல் கட்சி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மக்கள் காலை முதலே பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் . போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்புறம் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார் . ரசிகர்களை பார்த்து கையசைத்து அவர் வாழ்த்து தெரிவித்தார்

பின்னர் ரசிகர்களின் தீபாவளி வாழ்த்தையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 


மக்கள் கருத்து

ரஜனிNov 1, 2024 - 07:11:29 PM | Posted IP 172.7*****

வெறும் வாய் வீரன்

போயஸ் கார்டனில்Nov 1, 2024 - 12:14:39 PM | Posted IP 172.7*****

நல்லவேளை நாம கட்சி ஆரம்பித்து நாசமா போகாம, தம்பி விஜய் கட்சி ஆரம்பித்து விட்டார் நாம தப்பிச்சோம். ---- ரஜினி MIND VOICE

தீபாவளி வாழ்த்துOct 31, 2024 - 05:24:33 PM | Posted IP 162.1*****

நல்லவேளை நாம கட்சி ஆரம்பித்து நாசமா போகாம, தம்பி விஜய் கட்சி ஆரம்பித்து விட்டார் நாம தப்பிச்சோம். ---- ரஜினி MINDVOICE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory