» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குருந்தன்கோடு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!

வியாழன் 16, மே 2024 11:06:14 AM (IST)



குருந்தன்கோடு ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- "கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சிக்குட்பட்ட மேலகடியப்பட்டிணம் கடற்கரை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் மீனவர்கள் இளைப்பாறும் நிழற்கூடத்தினை ஆய்வு மேற்கொண்டதோடு, அருகாமையில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தினை மேம்படுத்துவதற்கு துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து கீழகடியப்பட்டணம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி கட்டிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பில் மேலகடியப்பட்டிணம் பகுதியில் 60,000 கொள்ளவு கொண்ட நீர் தேக்க தொட்டியும், ரூ.28.65 இலட்சம் மதிப்பில் முட்டத்தில் 1 இலட்சம் கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டியும் நேரில் பார்வையிடப்பட்டது.

முட்டம் ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் 15 வது நிதிக்குழு சுகாதார நிதியின் கீழ் ரூ.56 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார மையத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டோபர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory