» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் அண்ணாமலை பிரசாரம்: மார்ச் 4ல் நெல்லை, குமரி, தென்காசி..!

செவ்வாய் 26, மார்ச் 2024 12:00:06 PM (IST)

பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  4-ந்தேதி- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறங்கினாலும், தமிழகம் முழுவதும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பிரசார பயண விவரம் வருமாறு:-

29-ந்தேதி- ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, 30-ந்தேதி- சிதம்பரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, 31-ந்தேதி- கரூரில் பிரசாரம் செய்கிறார்.

மேலும் 31-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரையில் தான் போட்டியிடும் கோவை தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார். 4-ந்தேதி- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், 5-ந்தேதி- ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையில் மீண்டும் கோவையில் வாக்கு சேகரிக்கிறார். 9-ந்தேதி- கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, 10-ந்தேதி நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, 11-ந்தேதி கோவை, 12-ந்தேதி- கோவை, நீலகிரியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதன்பின்னர் பிரசாரம் முடிவடையும் வரையில் கோவையிலே முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory