» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுற்றுலா பயணிகளிடம் ரூ.69 ஆயிரம் பறிமுதல் : கதறி அழுத பஞ்சாப் பெண்!

திங்கள் 25, மார்ச் 2024 4:15:24 PM (IST)



பஞ்சாபில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் வைத்திருத்த ரூ.69 ஆயிரத்து 400 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை திருப்பிக் கேட்டு வடமாநில பெண் கதறி அழுதும் பணத்தை அதிகாரிகள் காெடுக்கவில்லை. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, டபுள் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர், உரிய ஆவணங்கள் இன்றி 69,400 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண், "நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமான மூலம் கோவை வந்தோம். அங்கிருந்து வாடகை காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தோம். எங்களுக்கு இந்த நடைமுறை தெரியாது. இப்போது கையில் செலவிற்கு கூட பணமில்லை. அதனால் எங்களது பணத்தை திரும்பக் கொடுங்கள்” எனக் கேட்டு கதறி அழுதார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து

தேர்தல்Mar 26, 2024 - 03:06:39 AM | Posted IP 162.1*****

வந்தா போதும் சின்ராச கைள புடிக்க முடியாது

மக்கள்Mar 25, 2024 - 05:08:26 PM | Posted IP 162.1*****

தமிழக காவல்துறையே இப்படி அப்பாவி மக்களை அழ வைக்கலாமா? பாவம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory