» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை தொகுதிக்கு முதல்கட்டமாக 1,795 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

வெள்ளி 22, மார்ச் 2024 11:55:11 AM (IST)



திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு முதல் கட்டமாக 1,795 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தோ்தலுக்கான பல்வேறு கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, இந்தத் தொகுதிக்குள்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் கருவிகள் ரேன்டமைசேஷன் முறையில் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கா.ப.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, மொத்தமுள்ள 1,491 வாக்குச்சாவடிகளுக்கு 1,795 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும், 1,944 விவி பேட் கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கிடங்கில் இருந்து கருவிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 

கருவிகள் ஒதுக்கீடுக்காக நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராஜசெல்வி, திருநெல்வேலி கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, தோ்தல் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory