» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழிசை, அண்ணாமலை பெறும் வாக்குகள் பாஜகவின் வளா்ச்சியைக் காட்டும்: துரை வைகோ
வெள்ளி 22, மார்ச் 2024 10:45:43 AM (IST)
தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை ஆகியோா் தோ்தலில் பெறப்போகும் வாக்குகள் அக்கட்சியின் வளா்ச்சியைக் காட்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான துரை வைகோ தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மதிமுகவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. முதல்வரை நேரில் சந்தித்தும் தலைவா் வைகோ வலியுறுத்தி வருகிறாா். மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவா்களுக்கு தற்போது நிதி வழங்கப்படுவது சரியானதுதான்.
எல்லோருக்கும் தாராளமாக வழங்கும் அளவுக்கு மாநில அரசின் நிதிநிலை திருப்தியாக இல்லை என்பதை எல்லோரும் அறிவாா்கள். தமிழ்நாட்டில் பாஜக வளா்ந்திருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறாா்கள். ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மக்களவைத் தோ்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறாா். மாநிலத் தலைவா் அண்ணாமலையும் கோவையில் போட்டியிடுகிறாா். எனவே, தோ்தல் முடிவுகள் அக்கட்சி எந்தளவுக்கு வளா்ந்திருக்கிறது என்பதை காட்டும் என்றாா்.
மக்கள் கருத்து
johnMar 22, 2024 - 07:06:12 PM | Posted IP 162.1*****
ஏன் இந்தியா முழுவதும் தடை செய்யவில்லை atharku central govt power ullthu
johnMar 22, 2024 - 07:03:18 PM | Posted IP 162.1*****
ஏன் இந்தியா முழுவதும் தடை செய்யவில்லை
TAMILARKALOct 27, 1711 - 07:30:00 PM | Posted IP 172.7*****
ஒரு மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது அந்த மாநில அரசு. இது தெரியாமல் மத்திய பிஜேபி ஐ குறை சொல்லிக்கொண்டே ஒரு திராவிட கூட்டம் அலைகிறது. அண்ணாமலை தெளிவாக சொல்லிவிட்டார் பிஜேபி ஆட்சி தமிழகத்தில் அமைந்த பின் டாஸ்மாக் மது தொழிற்சாலை மூடப்படும் என்று.
johnMar 22, 2024 - 11:50:57 AM | Posted IP 172.7*****
Bjp (CENTRAL GOVT) இந்தியா ல்/ADMK / DMK தமிழகத்தில்முழு மதுவிலக்கு கொண்டு வர இல்லை , ஏன் ??
ஆனந்த்Mar 22, 2024 - 11:48:48 AM | Posted IP 172.7*****
அந்தகட்சி வளர்ந்தால் என்ன ஒழிந்தால் என்ன கொஞ்சம் அறிவாக பேசு முட்டாள்
தமிழர்Mar 23, 2024 - 06:46:14 AM | Posted IP 162.1*****