» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக்கில் 12 வகையான மலிவு விலை புதிய மதுபானங்கள் அறிமுகம்!

வியாழன் 21, மார்ச் 2024 4:51:29 PM (IST)

தமிழகத்தில் கோடைக் காலத்தை முன்னிட்டு விலை மலிவான 12 புதிய மதுபானங்களை டாஸ்மாக் அறிமுகப்படுத்துகிறது.

அறிமுகப்படுத்தும் புதிய சரக்குகளுக்கு சிறப்பான பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு புதிய சரக்குக்கு வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் செயல்படும் மதுபான ஆலையில் இருந்து தயாரித்து விற்பனைக்கு வந்திருக்கும் சாதாரண வகை மதுபானமாக இந்த வீரன் இடம்பெற்றுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர வகை மதுப்பிரியர்களுக்கு உகந்ததாக உள்ளதாம்.

விரைவில், இதுபோன்ற புதிய மதுபான வகைகள் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதாக டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, 4 பியர் வகைகளுடன் புதிதாக 12 மதுபான வகைகள் விற்பனைக்குக் கொண்டு வர டாஸ்மாக் வாரியம் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், மக்களவைத் தேர்தல் முடிந்ததும், இவை டாஸ்மாக் அலமாரிகளை அலங்கரிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, வீரன் மதுபானம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டு மதுபானங்களின் விலைகள் உயர்த்தப்பட்ட பிறகு, மாலிவுவிலை மதுபானங்களின் விற்பனைதான் அதிகரித்து மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மதுபான விலைகளை டாஸ்மாக் இரண்டு முறை உயர்த்தியிருந்தது.

தற்போது டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை மதுபானங்களும், 49 வகை நடுத்தர மதுபானங்களும், 128 வகையான பிரீமியம் வகை மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமல்மல், 35 பியர் மற்றும் 13 வைன் வகைகள் விற்பனையில் உள்ளன. நடுத்தர மதுபானங்களை வாங்கி வந்த பல மதுப்பிரியர்கள், தற்போது சாதாரண வகை மதுபானங்களை வாங்கத் தொடங்கிவிட்டதையே விற்பனை விவரம் காட்டுகிறது. இந்நிலையில் மலிவு விலை மதுபானங்கள் அறிமுகம் ஆவதால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து

JAIHINDMar 22, 2024 - 03:48:55 PM | Posted IP 172.7*****

மத்திய பிஜேபி அரசு ராக்கெட் ஏவுதளம் அமைக்கிறார்கள், விண்வெளிக்கு ராக்கெட் விடுகிறார்கள். புல்லட் ரயில் விடுகிறார்கள், நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.திராவிட கட்சிகள் அவர்களை குறை கூறிக்கொண்டு டாஸ்மாக் ஐ முன்னேற்ற பாடுபடுகிறார்கள்........

johnMar 22, 2024 - 10:32:28 AM | Posted IP 162.1*****

Dmk / Admk / Bjp govt enn thadai pannavillai ??

இது தான்Mar 22, 2024 - 08:44:52 AM | Posted IP 162.1*****

திராவிடத்தின் சாதனை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory