» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடன் கருணாஸ் சந்திப்பு: திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்!

வியாழன் 21, மார்ச் 2024 12:48:34 PM (IST)

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கருணாஸ் சந்தித்தார். 

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சனாதானத்தை வீழ்த்தி, சமூக நீதி காக்க திமுகவுக்கு ஆதரவளிப்பதாக கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், மக்கள் விரோத சநாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிடமுன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 முக்குலத்தோர் புலிப்படை 5 முக்கிய கோரிக்கைகள்
 
1.   மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரைச் சூட்ட  ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

 
2.   பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை (அக்டோபர்30) அரசு விடுமுறை   நாளாக அறிவிக்க வேண்டும்.

3.   மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கள்ளர் – மறவர் – அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவித்த அரசாணையை நடமுறைப்படுத்தவேண்டும். இரண்டரை கோடி மக்கள் தொகை உள்ள முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25% இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.


4.   தமிழ்நாட்டில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

 
5.   ஒன்றிய அரசு புதிதாக கட்டியுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வெள்ளையரை வெளியேற்ற அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க வேண்டும்.


மக்கள் கருத்து

முட்டாள்Mar 22, 2024 - 11:11:48 AM | Posted IP 162.1*****

இனி திமுக வெற்றிபெறுவது வாய்ப்பில்லை கூவத்தூர் மாமாவுக்கு மக்கள் ஆப்பு வைப்பார்கள்

ஆனந்த்Mar 21, 2024 - 06:53:04 PM | Posted IP 162.1*****

மாமா மாமா

JAY FANSMar 21, 2024 - 04:03:59 PM | Posted IP 162.1*****

சனாதனம் பற்றி உயர்வாக மதித்தவர் முத்துராமலிங்க தேவர் அவர்கள்,. அவருடைய பேரை சொல்லி இந்த மிஷனரி ஏமாற்றுகிறார்.ஜெ . இருந்தவரை அவருக்கு ஜால்ராபோட்டுவிட்டு இப்போது....சனாதனம் எதிர்ப்பு ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory