» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு : ஆட்சியர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்!

திங்கள் 18, மார்ச் 2024 11:49:05 AM (IST)



கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு வாகன பிராச்சாரத்தினை  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,   கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி  கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிராச்சாரத்தினை  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,   கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னெற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை அமைதியாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்கும் வகையிலும், தங்களுடைய ஜனநாயக கடமையினை ஆற்றும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முதல் தேர்தல் விழிப்புணர்வு வாகனம் வாயிலாக ”தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்” என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியினை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் விழிப்புணர்வு பிராச்சார பயணம் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில்  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வாக்குரிமை பெற்ற அனைவரும் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து, நமது மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு பெற்ற மாவட்டமாக திகழ செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், தேர்தல் வட்டாட்சியர் வினோத், உசூர் மேலாளர் ஜுலியன் தாஸ், துணை தேர்தல் வட்டாட்சியர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory