» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழிசை செளந்தரராஜன் ராஜினாமா கடிதம்! தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி?

திங்கள் 18, மார்ச் 2024 11:36:38 AM (IST)

ஆளுநர் பதவியை ராஜினாமா தமிழிசை செளந்தரராஜன் செய்துள்ளார். அவர், திருநெல்வேலி, தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.அதேபோல், தமிழகத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழிசை செளந்தரராஜன் பாஜக தலைமையில் விருப்பம் தெரிவித்தாக சில நாள்களுக்கு முன் தகவல் வெளியானது.

தற்போது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதவியை ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழிசை கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓரிரு நாள்களில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு திமுக கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 செப்டம்பரில் தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார். பின்னர், புதுவை துணைநிலை ஆளுநராக 2021-ல் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

TIRUCHENDUR MURUGARMar 19, 2024 - 04:00:03 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் மேடம். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி .

கந்தசாமிMar 18, 2024 - 04:42:42 PM | Posted IP 172.7*****

தோல்வி நிச்சயம்

TUTY MAKKALMar 18, 2024 - 03:58:29 PM | Posted IP 172.7*****

WE ARE EXPECTING YOUR VALUABLE SERVICE IN TUTICORIN. WELCOME. தமிழிசை அவர்கள் தூத்துக்குடி தொகுதியில் பிஜேபி வேட்பாளராக வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார். ஜெய்ஹிந்த்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory