» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தம்: ஊழியர்கள் சோதனையால் பயணிகள் அச்சம்

ஞாயிறு 17, மார்ச் 2024 9:37:41 AM (IST)

நாகர்கோவில் நோக்கி வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரயில்வே ஊழியர்கள் ரயிலில் சோதனையிட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு புறப்பட்ட பெங்களூரு எக்ஸ்பிரஸ் நேற்று வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு பயணிகளை இறக்கி விட்டு வள்ளியூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது ரயிலில் உள்ள ஏதோ ஒரு பெட்டியில் உள்ள சக்கரங்களில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் உணர்ந்தனர்.

உடனே இதுகுறித்து வடக்கு பணகுடி ரயில் நிலையத்துக்கும், பெங்களூரு எக்ஸ்பிரஸ் என்ஜின் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பெங்களூரு ரயிலுக்கு வடக்கு பணகுடி ரயில் நிலையத்தில் சிக்னல் வழங்கப்படவில்லை. இதனால் அந்த ரயில் நிலையத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ரயிலின் கார்டு தனது பெட்டியை விட்டு இறங்கி, ஒவ்வொரு பெட்டியாக நடந்து சென்று சோதனை செய்தபடி சென்றார். மேலும் பணகுடி ரயில் நிலைய ஊழியர்களும் ரயில் பெட்டிகளில் சக்கரங்கள் இருக்கும் பகுதியை பார்வையிட்டபடி சென்றார்கள்.

இதற்கிடையே நிறுத்தம் இல்லாத ரயில் நிலையத்தில் எதற்காக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்தது. மேலும் ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்ததை பார்த்து பயணிகள் பதற்றம் அடைந்து என்னாச்சு, ஏதாச்சு என ரயில்வே ஊழியர்களிடம் கேட்டனர்.

ஆனால், அவர்கள் அதற்கு சரியான பதிலை கூறவில்லை. இதனால் பயணிகள் மத்தியில் மேலும் பதற்றம் அதிகரித்தது. சோதனை முடிந்த போது ரயில் சக்கரங்களில் பிரச்சினை இல்லை என்பதை ரயில்வே ஊழியர்கள் அறிந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் 15 நிமிடம் பெங்களூரு எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் வழக்கமான நேரத்தை விட நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கும் 10 நிமிடம் ரயில் தாமதமாக வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory