» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணிப் பேச்சு: ஒரு தொகுதி வழங்க கோரிக்கை!

புதன் 13, மார்ச் 2024 12:40:47 PM (IST)



அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தமாக, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் பாஜகவுடன் கூட்டணியில் போட்டியிட இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன. இந்த நிலையில், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆரணி அல்லது வேலூர் தொகுதியில் ஒரு தொகுதி வழங்கினால், தமிழகம் முழுவதும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து

MGR FANSMar 13, 2024 - 03:28:36 PM | Posted IP 172.7*****

அதிமுக நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதா ?? இந்த கோமாளி டுபாக்கூர் கூட கூட்டணி பற்றி பேசுகிறார்கள்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory