» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!

சனி 9, மார்ச் 2024 4:47:02 PM (IST)



குமரி மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளை அடிக்கல் நாட்டியும் அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், முன்னிலையில் இன்று (09.03.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், தேரேகால் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் PERI URBAN (2023-24) திட்டத்தின்கீழ் ரூ.28 இலட்சம் மதிப்பில் SH-46 முதல் புரவசேரி சாலையை பலப்படுத்துதல் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பெரிய குளம் செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின்கீழ் (2023-24) ரூ.1.29 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழக்குடி இரண்டாம் நிலை பேரூராட்சிக்குட்பட்ட வீரநாராயணமங்கலம் பழையாற்று கிழக்குப் பக்க சாலையில் நபார்டு திட்டத்தின்கீழ் (2023-24) ரூ.1.06 கோடி மதிப்பில் கருந்தளம் அமைக்கும் பணியும், பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தாலிருந்து மத்தியாஸ் நகர், நரிப்பாலம் வரை ரூ.1.16 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியும், 

அழகியபாண்டியபுரம் இரண்டாம் நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பில் பெருந்தலைக்காடு துவச்சி சாலை முதல் கடுக்காதிட்டை வரை சாலை மேம்பாடு பணிகளும், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் PERI URBAN (2023-24) திட்டத்தின்கீழ் ரூ.18 இலட்சம் மதிப்பில் வள்ளுவர் நகர் சாலையை பலப்படுத்துதல் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.5.27 கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள் ஆலிவர் தாஸ் (பூதப்பாண்டி), ஜெயஷீலா கேட்சன் (அழகியபாண்டியபுரம்), சிவகுமார் (தாழக்குடி), ஊராட்சி தலைவர்கள் கல்யாணசுந்தரம் (செண்பகராமன்புதூர்), கண்ணன் (புத்தேரி), கேட்சன், சத்குரு கண்ணன், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரவணன் உட்பட துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory