» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவைத் தேர்தலில் மநீம போட்டியில்லை; திமுக கூட்டணிக்கு ஆதரவு: கமல் அறிவிப்பு!

சனி 9, மார்ச் 2024 4:24:57 PM (IST)



மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்காக கமல்ஹாசன் பிரசாரம் மட்டுமே செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  அப்போது, 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரப் பணிகள் மேற்கொள்வதெனவும், வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்து ஏன் என்பது தொடர்பாக பேசிய அவர், "இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு எங்களின் எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ThanukrishnanMar 9, 2024 - 06:59:35 PM | Posted IP 172.7*****

Tamilaka

ThanukrishnanMar 9, 2024 - 06:58:30 PM | Posted IP 172.7*****

Anna tvk 2026

ThanukirshnanMar 9, 2024 - 06:58:01 PM | Posted IP 172.7*****

2026 Chief minister

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory