» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு: ஓபிஎஸ் அறிவிப்பு

சனி 9, மார்ச் 2024 12:11:32 PM (IST)

மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவடைந்ததும் ஏப்ரல் மாதத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதை அடுத்து, கூட்டணி குறித்து பேர்ச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.அந்த குழுவில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஆர்.தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து

gopiMar 9, 2024 - 03:39:25 PM | Posted IP 172.7*****

பணக்காரனுக்கும் ஏழையா இருந்தலூம் மற்றம் நாம்பாலாபோல சரசரி மனிதன் தாண் முடிவு எடுக்காபாடுது எல்லத்துக்குமே கடவுள் ஒரு இதயம் தாண் குடுத்துஇருக்கிறார் இங்கு உள்ள அனைவரும் வாழ்க்கை மறைவேண்டும்! தளபதி

RajeshMar 9, 2024 - 01:44:43 PM | Posted IP 172.7*****


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory