» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசிக துணைப் பொதுச் செயலாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சனி 9, மார்ச் 2024 11:08:02 AM (IST)

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சென்னையை தவிர்த்து கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டில் இரண்டு முறை வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆதவ் அர்ஜுனா வீட்டில் சோதனை நடத்தினர். சென்னையில் இன்று அரசு ஒப்பந்ததாரர் கரூர் செல்வராஜூக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றுவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory