» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காணாமல் போன 577 செல்போன்கள் மீட்பு: தென்காசி எஸ்.பி., சுரேஷ்குமார் தகவல்

வெள்ளி 8, மார்ச் 2024 10:07:00 AM (IST)



தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன 577 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
 
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ்கணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளர் வசந்தி, உதவி ஆய்வாளர் மற்றும் சைபர் கிரைம் காவலர்களின் தீவிர முயற்சியால் தென்காசி சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த நபர்களின் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 316 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.

முடக்கம் செய்யப்பட்ட தொகை ரூ.13,77,15,099ஆகும். அதில் பாதிக்கப்பட்ட 48 நபர்களுக்கு பணம் மொத்தம் ரூ.62,22,194 ஆகும். மீட்கப்பட்ட மற்றும் காணாமல் போன விலை உயர்ந்த 65 எண்ணிக்கை யுள்ள ரூ.11,70,000 மதிப்பு உள்ள செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேற்று உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். மீதம் உள்ள தொகையை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கிடைக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக இதுவரை 577 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. மேலும் சைபர் கிரைம் மூலம் பணம் இழந்த நபர்களுக்கு பணத்தை மீட்டு எடுக்கவும் அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory