» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாற்றுத்திறன் சிறார்களுக்கான சுற்றுலா பயணம்: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்!

வியாழன் 7, மார்ச் 2024 3:39:57 PM (IST)



குமரியில், சுற்றுலாத்துறையின் சார்பில் மாற்றுத்திறன் சிறார்களுக்கான ஒரு நாள் சுற்றுப்பயணத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம்  துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில்  மாற்றுத்திறன் சிறார்களுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம்  ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இன்று துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை மகிழ்விக்க ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லும் சிறப்பு திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.  மாற்றுத்திறனாளி குழந்தைகளை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் போது அவர்களின் மனஅழுத்தம் குறைந்து புத்துணர்ச்சியும் மன மகிழ்வும் ஏற்படும்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில்   தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் மாற்றுத்திறனுடைய 60 இளம் சிறார்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது. ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்கு சாந்தி நிலையம் ஆரம்ப நிலைய பயிற்சி பள்ளி, எறும்புகாடு ORAL HR.SEC. School for the HEARING IMPAIRED, நாகர்கோவில் மற்றும் REJOICE SCHOOL FOR ASUTISM AND THE DEVELOPMENTALLY DELAYED, நாகர்கோவில் ஆகிய மூன்று பள்ளிகளில் இருந்து மாற்றுத்திறனுடைய குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் 60 நபர்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவ்ஒரு நாள் கல்வி சுற்றுலாவில் ECO Park,  விவேகானந்தர் பாறை, அரசு அருங்காட்சியகம், திரிவேணி சங்கமம், மீன் அருங்காட்சியகம், சூரிய அஸ்தமன பகுதி, காட்சி கோபுரம் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.இந்நிகழ்வில்  மாவட்ட சுற்றுலா அலுவலர் து.காமராஜ், கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் எஸ்.ஆர்.பிரியா,  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் விஜய் ஆனந்த், செல்வி. உதவி சுற்றுலா அலுவலர் த.கீதாராணி, பள்ளி முதல்வர்கள், உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory