» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செந்தில் பாலாஜியின் காவல் 21-வது முறையாக நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 4:38:29 PM (IST)

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21-ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், புழல் சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜா் படுத்தபட்டாா். இதையடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப்.20-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory