» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவைத் தேர்தல்: பிப்.19-ம் தேதி முதல் திமுக விருப்ப மனு விநியோகம்!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 3:56:07 PM (IST)

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப்.19-ம் தேதி இருந்து விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று திமுக அறிவித்துள்ளது. 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தற்போது தமிழகத்தின் முதல் கட்சியாக, திமுக வேட்பாளர் தேர்வுக்கான முதல் கட்டமான, விருப்ப மனு பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும் பிப்.19-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

போட்டியிட விரும்புவோர், விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆயிரமாகும். விண்ணப்ப படிவத்தை ரூ.2 ஆயிரம் செலுத்தி தலைமைக்கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்’’என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory