» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் : தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி 16, பிப்ரவரி 2024 10:26:56 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கருதாமல் மூன்றாவது மொழியை எடுத்து படித்து வருகின்றனர்.பொதுத் தேர்வில் மூன்றாவதாக எடுக்கும் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து மூன்றாவதாக எடுக்கப்படும் விருப்பப் பாடத்திலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை பயிலும் மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதும்.

ஆனால், விருப்ப பாடமாக மலையாளம், உருது, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். விருப்ப பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெறுவது கட்டாயம். அடுத்த கல்வியாண்டில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory