» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளை.,யில் 17ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!

சனி 10, பிப்ரவரி 2024 12:28:55 PM (IST)

பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வருகிற 17ஆம் தேதி (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம்   இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.02.2024 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை புனித யோவான் கல்லூரி (St. John’s College) பாளையங்கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்  தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு  வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர்.  

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விபரம் (Resume), கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 09.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில்  (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்களும்  (www.tnprivatejobs.tn.gov.in)   என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel –இல் இணைந்து பயன்பெறலாம்.

இம்முகாமில் பணிநியமனம்  பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இரத்து செய்யப்படமாட்டாது எனவும் வேலைநாடுநர்கள் இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory