» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயர்நீதிமன்ற நீதிபதி எனக் கூறி மிரட்டல் விடுத்தவர் கைது: சி.பி.ஐ அதிரடி

சனி 10, பிப்ரவரி 2024 11:16:42 AM (IST)

தன்னை உயர்நீதிமன்ற நீதிபதி எனக் கூறி அதிகாரிகளுக்கு இ-மெயில் அனுப்பி மிரட்டியவரை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், 2014-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ராமநாதபுரம் மாவட்டம், கீழநாகாச்சி சிப்காட்டில் பிளாஸ்டிக் நிறுவனம் அமைக்க எனக்கு கடந்த 2000-ம் ஆண்டில் 2 ஆயிரம் சதுர அடி ஒதுக்கப்பட்டது. இதற்கான தொகையை, 8 மாத தவணைகளில் செலுத்தும்படி அறிவுறுத்தினர். ஆனால் தவணைத்தொகையை முறையாக செலுத்தவில்லை எனக்கூறி எனக்கு இடம் ஒதுக்கியதை 2004-ம் ஆண்டில் ரத்து செய்தனர். 

இது தொடர்பான வழக்கின் உத்தரவுப்படி ரூ.11.25 லட்சத்தை ஒரே தவணையில் செலுத்தும்படி கூறியுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி புகழேந்தி விசாரித்தார். முடிவில், மனுதாரர் வழக்கில் முகாந்திரம் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், மனுதாரர் தன்னை உயர்நீதிமன்ற நீதிபதி என அதிகாரிகளுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். அவர் காட்டிய ஆவணங்களை பார்த்த போது சந்தேகம் வருகிறது.

இந்த விவகாரம் குறித்து மதுரை சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதன்பேரில் மனுதாரர் தாக்கல் செய்த நீதிபதி நியமன அறிவிப்பாணையின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதன்பேரில், பாண்டியன் உயர்நீதிமன்ற நீதிபதியா? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் அவர் வி.ரவிச்சந்திரன் பான்டியன் என்ற பாண்டியன் என்பதும், உயர்நீதிமன்ற நீதிபதி என பொய்யான தகவல் தெரிவித்து, மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து நேற்று பாண்டியனை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory