» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா: முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு!

சனி 10, பிப்ரவரி 2024 11:09:55 AM (IST)



குமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது. 

கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தை அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3-30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. 

அதன் பிறகு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து உச்சிக்கால தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு 4-30மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். இரவு 9 மணிக்கு வெள்ளிகலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. 

அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக கோவிலுக்குள் அம்மன் பிரவேசித்த நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory