» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கால்வாயில் உடைப்பு: நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

புதன் 8, டிசம்பர் 2021 12:27:40 PM (IST)செங்கோட்டை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சாஸ்தாபத்து குளம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர் மழையால் தண்ணீர் அதிகம் வந்ததால் குளத்தின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களில் தண்ணீர் புகுந்து நெல் பயிர்கள் அனைத்தும் நாசமாகின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  கோபால சுந்தரராஜ் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவருடைய உத்தரவின் பேரில் அதிகாரிகள் குளத்தின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சரி செய்தனர். இந்நிலையில் மீண்டும் பெய்த தொடர் மழையால் சாஸ்தாபத்து குளத்து கால்வாயில் 3-வது முறையாக மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியாகி அருகில் உள்ள வயல்களில் புகுந்தது. அந்த வயல்களில் பயிரிடப்பட்டு உள்ள நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. எனவே, இதை சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory