» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

வியாழன் 22, ஏப்ரல் 2021 12:31:05 PM (IST)

தமிழகத்திலிருந்து ஆந்திரா,  தெலங்கானா மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பிவைக்கப்பட்டது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து நேற்று செய்திகள் வெளியாகின. மேலும், தமிழகத்தில் ரெம்டிசிவர் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவுக்கு இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது எனவும் தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. 

இந்த செய்தியின் அடிப்படையில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக. இந்த வழக்கை எடுக்கவில்லை.  மற்ற மாநிலங்களில் உள்ள நிலை இங்கு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், தமிழகத்தில் போதிய அளவு ஆக்ஸிஜன் உள்ளதா, வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? தமிழகத்தில் போதிய அளவில் ரெம்டெஸிவிர் மருந்து இருப்பு உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று மதியம் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் அறிவுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam






Thalir Products

Black Forest Cakes



Thoothukudi Business Directory