» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை -திப்ருகார் இடையே முன்பதிவுடன் கூடிய ஒரு வழி சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு!

வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:59:51 PM (IST)

மதுரையிலிருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் வரை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வண்டி எண் 06002  மதுரை -திப்ருகார் ஒரு வழி சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மார்ச் 1 ஆம்  தேதி (திங்கள் கிழமை)    முற்பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு மார்ச் 4 ஆம்  தேதி (வியாழக் கிழமை)  காலை  06.45 மணிக்கு திப்ருகார் சென்று சேரும்.

இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருதாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எக்மோர், சுலூர்பேட்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, விசாகபட்டினம், பெர்ஹாம்பூர், குர்தா ரோடு , புவனேஸ்வர் , கட்டாக் , பலாஸோர் , ஹிஜில்லி , டாடா நகர், புருலியா, ஜாய்சந்தி பஹார், அசன்சோல், ஆண்டல், துர்காபூர், சியூரி, ராம்புர்ஹாட், பக்கூர், நியூ ஃபாரக்கா, மால்டா டவுன், பார்சோய், கிஷன்கஞ்ச், நியூ ஜல்பைகுரி, நியூ மேனகுரி, துப்குரி, நியூ கூச்பெஹார், நியூஅலிபூர்த்துவார், பாக்கிராகிரம், கோக்ராஜ்கர், நியூ பொங்கைகான் , ராங்கியா , நியூ மிஸாமாரி , ரங்கபாரா வடக்கு, விஸ்வநாத் சிர்லி, ஹர்முட்டி, வடக்கு லக்கிம்பூர், தேமாஜி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், நான்கு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், பதின்மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory