» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)
தூத்துக்குடியில், பருவகால மாறுபாடுகளால் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க, மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மழைநீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு, நிலத்தடி நீரின் உவர்ப்புத் தன்மையும் குறைந்து பயன்பாட்டிற்கு ஏதுவானதாக மாறுகிறது. வறட்சி காலங்களில் மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்குப் பயன்படக்கூடிய நீர்நிலைகள் ஏதும் இல்லாத சூழலில், ஒவ்வொரு கட்டடத்திலும் மழைநீரைச் சேகரித்து வைக்கும் அமைப்பை ஏற்படுத்துவது இன்றியமையாததாகிறது.மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்தி, நீர் ஆதாரத்தைப் பெருக்கும் அரசு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பொதுமக்கள் தூத்துக்குடி மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவை (Town Planning Section) நேரில் அணுகி விவரங்களைப் பெற்றுச் செயல்படுத்தலாம் என ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:50:14 PM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:42:31 PM (IST)

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)

போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:35:38 PM (IST)








