» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:42:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் படர்ந்தபுளி கிராமத்தில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
கடம்பூர் அருண் ராஜா அறிவுறுத்தலின்படி நடத்தப்பட்ட இக்கண் சிகிச்சை முகாமில் பல்வேறு தரப்பு மக்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மருத்துவர் ஷேக் அப்துல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குக் கண் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
பரிசோதனையின் முடிவில் தீவிர கண் பாதிப்பு கண்டறியப்பட்ட 5-க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சிகிச்சைக்காகத் பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் வீ த லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் அஸ்வின், காட்டுராஜா, அருணாச்சலம், வெங்கடேஷ், பொன்ராஜ், சுப்புராம், சரண்ராஜ், சுபாஷ் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:50:14 PM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)

போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:35:38 PM (IST)








