» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு!

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:35:38 PM (IST)

DIGKanjacase.jpg

தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டிஐஜி  பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். 

தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் படையினரின் பணியைப் பாராட்டி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேற்று அவர்களை நேரில் அழைத்துச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

காவல் உதவி ஆய்வாளர் ஐ. முத்துராஜா, தலைமைக் காவலர்கள்: மு. கார்த்திக், ஜே. ஜோசப், காவலர்கள் அ. விசு, ப. தினேஷ்குமார், போக்குவரத்துப் பிரிவு: தலைமைக் காவலர் ஆகியோரை சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து இவர்களது சிறப்பான பணியைப் பாராட்டிய டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு, அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

Selvakumari MAug 24, 2026 - 05:51:57 PM | Posted IP 172.7*****

இந்த செயல்பாடு மாணவர்கள் வாழ்க்கை கெட்டு போகாமல் இருக்க இதுவும் ஒரு உதவி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory