» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சின்னத்துரை அன் கோவில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை : மக்கள் கூட்டம் அலைமோதல்!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 8:25:27 PM (IST)

KCgoldtuty.jpg

தூத்துக்குடியில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு கே.சின்னத்துரை கோல்டு ஹவுசில் தங்க நகைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. 

தென் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற பிரபல ஜவுளி மற்றும் தங்கநகை விற்பனை நிறுவனமான 'கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரல், திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 ஆடிப்பெருக்கு அன்று நகை வாங்கினால் வீட்டில் நகை அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதேபோல், சுபகாரியங்களுக்கும் மக்கள் நகை வாங்கிச் செல்வார்கள். ஆடிப்பெருக்கு தினமான இன்று மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர். இதனால் கே.சின்னத்துரை கோல்டு ஹவுசில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  

இதுபோல் கே.சின்னத்துரை அன்கோவில் தற்போது ஆடி சிறப்பு தள்ளுபடி மற்றும் பனிமயமாதா திருவிழாவை முன்னிட்டு 20% சிறப்பு தள்ளுபடி விற்பனை களை கட்டியுள்ளது. ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கான ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனனைக்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads








Thoothukudi Business Directory