» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமுதாயத்தைக் குறிப்பிட்டு நாளிதழில் அவதூறு செய்தி வெளியீடு: விஸ்வகர்ம பேரவையினர் கண்டனம்!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:16:17 PM (IST)

Vishwagarmaprotest.jpg

நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரைச் சுட்டிக்காட்டி அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி, அந்நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்ம சமுதாய மகாஜன பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்ம சமுதாய மகாஜன பேரவையின் தலைவர் முருகேசன், செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையி்ட்டு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அளித்த நகை தொடர்பான புகாரை செய்தியாக வெளியிட்ட பிரபல தமிழ் நாளிதழ், தனிநபர் மீதான குற்றச்சாட்டிற்கு ஒட்டுமொத்த ஆசாரி சமுதாயத்தின் பெயரைப் பயன்படுத்தி அவதூறாகச் செய்தி வெளியிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவரும் சூழலில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முகவரி மற்றும் தந்தை அடையாளம் இருந்தபோதிலும், எந்தவொரு செய்தியிலும் ஜாதியை அடையாளப்படுத்தி செய்தி வெளியிடுவது கிடையாது. ஆனால், வடமாநிலத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு, ஒட்டுமொத்த ஆசாரி சமூகத்தையும் குறிவைத்து செய்தி வெளியிட்டிருப்பது பத்திரிகை தர்மத்திற்கும் மரபிற்கும் எதிரானது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்திரிகை மரபை மீறி ஜாதி பெயரைச் சுட்டிக்காட்டிச் செய்தி வெளியிட்டதால் சமுதாய மக்கள் மனவேதனை அடைந்துள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads








Thoothukudi Business Directory