» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியில் பாதுகாப்பு குறைபாடு : ஆட்சியரிடம் அ.தி.மு.க. முறையீடு!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 11:48:51 AM (IST)

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் எந்தவித எச்சரிக்கை பலகையோ, தடுப்புகளோ வைக்கப்படாததால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத் துணைச் செயலாளரும், மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய இயக்குநருமான சந்தனம், மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் "தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 3-வது மைல் பகுதியில் இருந்து பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறுகலான இந்தப் பகுதியில் சுமார் 10 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இங்குப் பாதுகாப்பு கருதி எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகையோ அல்லது தடுப்புப் பேரிகாடுகளோ வைக்கப்படவில்லை. இந்தப் பாதையானது 24 மணி நேரமும் அதிகளவில் வாகனப் போக்குவரத்து நிகழும் முக்கியச் சாலையாகும். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்குகளும் அகற்றப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், ஆழமான குழியில் விழுந்து படுகாயமடைவதுடன் வாகனங்களும் சேதமடைகின்றன.

எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாகச் சம்பவ இடத்தைக் கள ஆய்வு செய்து, உயிர் பலி போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்கீள் ஓடைக் கால்வாய் ஓரத்தில் பாதுகாப்புப் பேரிகாடுகள் வைக்கவும், இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியவும் ஆவன செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads








Thoothukudi Business Directory