» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரிக்கை : தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:10:56 PM (IST)

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி கல்லூரி நுழைவாயில் முன்பாக இன்று காலை 10:15 மணி முதல் 10:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் தீவிர கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினர் குண்டுகட்டாகக் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 3:22:26 PM (IST)

தூத்துக்குடியில் 6 மாதங்களாக வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி!
வெள்ளி 24, ஜூலை 2026 3:12:01 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலைய மரண விவகாரம்: இளைஞர் அருணாச்சலத்தின் உடல் ஒப்படைப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:04:00 PM (IST)

கடைகளில் 240 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் – ரூ.13,000 அபராதம்!
வெள்ளி 24, ஜூலை 2026 11:30:47 AM (IST)

தூத்துக்குடி அருகே கொடூரம்: குடிபோதை தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை – 3 பேருக்கு வலைவீச்சு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:54:24 AM (IST)

தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 8:39:07 AM (IST)








