» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடுத்தடுத்து 4 தோட்டங்களில் இரும்புக் கதவுகள் திருட்டு: வாலிபர் கைது!
செவ்வாய் 16, ஜூன் 2026 7:57:22 PM (IST)
தட்டார்மடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 வெவ்வேறு விவசாயத் தோட்டங்களில் புகுந்து, அங்கிருந்த இரும்புக் கதவுகளைத் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள அன்பின் நகரத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் அகஸ்டின். இவருக்குச் சொந்தமான தோட்டம் மணி நகர் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தோட்டத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கதவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோன்று, நடுவக்குறிச்சி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த கணபதி, அதே பகுதியைச் சேர்ந்த வேல் பாண்டியன் மற்றும் கேட்டவிளை பகுதியைச் சேர்ந்த வேல்முத்து ஆகியோரது விவசாயத் தோட்டங்களிலும் அடுத்தடுத்து இரும்புக் கதவுகள் திருட்டுப் போயின. இதனால் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இத்தொடர் திருட்டுகள் குறித்து பாதிக்கப்பட்ட தோட்ட உரிமையாளர்கள் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விவசாயிகளின் புகார்களின் பேரில், தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபால் வழக்குப் பதிவு செய்து, திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். மேலும், திருட்டு நடந்த தோட்டங்களின் அருகே மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கியச் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், இரும்புக் கதவுகளைத் திருடிச் சென்றது கேட்டவிளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் வசந்த் (30) என்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த வசந்தைப் போலீசார் நேற்று (திங்கட்கிழமை) மடக்கிப் பிடித்துக் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் கெடுபிடி விசாரணையில், ஜேம்ஸ் அகஸ்டின், கணபதி, வேல் பாண்டியன் மற்றும் வேல்முத்து ஆகிய 4 பேரின் தோட்டங்களிலும் இரும்புக் கதவுகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வசந்தைத் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் திருடிப் பதுக்கி வைத்திருந்த இரும்புக் கதவுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பரிதாப பலி!
புதன் 17, ஜூன் 2026 7:27:37 AM (IST)

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

கயத்தார் வட்டத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு: அரசு அலுவலகக் கோப்புகள், பதிவேடுகள் சரிபார்ப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:17:16 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது!
செவ்வாய் 16, ஜூன் 2026 7:42:38 PM (IST)









