» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பப் பிரச்சினை: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

வெள்ளி 12, ஜூன் 2026 11:05:34 AM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே செம்பூர், சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளி ரத்தினம் மகன் ராஜ் (35). இவருக்குக் கடந்த சில நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜ், நேற்று இரவு தனது வீட்டின் வெளியே இருந்த முருங்கை மரத்தில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரி, ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory