» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காற்றாலையில் மின்சாரம் தாக்கி பொறியாளர் உயிரிழப்பு : உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 8:05:26 AM (IST)
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள தனியார் காற்றாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பொறியாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்தக் காற்றாலைகளில் அந்தந்த நிறுவனங்கள் சார்பில் மாதந்தோறும் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி, தட்டப்பாறை அருகே உள்ள உமரிகோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையில் மாதாந்திர பராமரிப்புப் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்பணியில், அந்த நிறுவனத்தின் முதுநிலைப் பொறியாளரும், வடக்கு கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கொம்பன் என்பவரின் மகனுமான மணிவண்ணன் (38) என்பவர் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பணியின் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மணிவண்ணன் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மணிவண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தட்டப்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மணிவண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் காற்றாலை நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அவரது மனைவி நர்மதா மற்றும் உறவினர்கள் மேல லட்சுமிபுரத்தில் உள்ள அந்த நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக் களத்திற்கு விரைந்த மணியாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜீத்குமார், ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், உயிரிழந்த மணிவண்ணன் குடும்பத்திற்குத் தனியார்த் காற்றாலை நிறுவனம் 75 இலட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டது. இதில் முதற்கட்டமாக 57 இலட்ச ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ள 18 இலட்ச ரூபாயை மாதம் 30 ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கவும் நிறுவனம் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் தங்களது முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









