» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போன் பறித்த 3 பேர் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!

வியாழன் 11, ஜூன் 2026 8:01:34 PM (IST)



ப்போதும்வென்றான் அருகே இளஞ்சிறாரை மிரட்டி கைபேசியைப் பறித்துச் சென்ற வழக்கில், 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் எல்லைக்குட்பட்ட மேலச்செய்தலை கிராம விலக்குச் சாலையில், கடந்த மே மாதம் 17-ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் இளம்சிறார் ஒருவர் தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளம்சிறாரை மிரட்டி, அவரிடமிருந்த ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு, தங்களது வாகனங்களில் வேகமாகத் தப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்துநகர் சேசு நகர்ப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் மகன் தமிழரசன் (21), தூத்துக்குடி துரைசிங்நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து (19), கடம்பூர் அருகே உள்ள ஓனமா குளம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் முத்துச்செல்வன் (19) ஆகிய 3பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, திருடப்பட்ட செல்போன் மற்றும் 2 பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory