» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு கண்காணிப்பு குழு கலைப்பு: புதிய குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு

வியாழன் 11, ஜூன் 2026 5:49:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது 14.06.2017 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள் கலைக்கப்பட வேண்டும். எனவே நடைமுறையில் உள்ள தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது.

புதிய குழுவிற்கான உறுப்பினர்கள் கீழ்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

1. மாவட்ட ஆட்சியர் தலைவர்

2. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செயல் உறுப்பினர்

3. மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
(பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் அல்லது மாநில அரசால் பரிந்துரை செய்யப்படும் தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டுக்கும் மிகாத நபர்கள்) உறுப்பினர்

4. காவல் கண்காணிப்பாளர் உறுப்பினர்

5. உதவி இயக்குநர், பேரூராட்சிகள் உறுப்பினர்

6 அனைத்து மாநகராட்சி ஆணையர் / மாநகராட்சி ஆணையர்கள்/மண்டல அளவிலான உறுப்பினர்

7 மாவட்டத்தில் இரயில்வே துறையினைச் சேர்ந்த ஒரு பொறுப்பாளர் கெஜட் அதிகாரிகள் உறுப்பினர்

8 அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள்
மனித கழிவுகளை அகற்றும் தொழில் செய்வதை தடுத்தல் மற்றும் மறுவாழ்விற்காக பணி மேற்கொள்ள முன்வரும் எண்ணிக்கையில் 4 பேருக்கு மேற்படாத சமூக ஆர்வலர்கள் (மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்டவர்கள்) உறுப்பினர்

9 மாவட்ட அளவிலான வங்கி குழுவின் ஒரு பொறுப்பாளர் உறுப்பினர்

எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் தூத்துக்குடி மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 15.06.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory