» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜமாபந்தியில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

வியாழன் 11, ஜூன் 2026 4:46:35 PM (IST)



ஏரல் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மொத்தம் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று வருவாய் தீர்வாய அலுவலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 02.06.2026 அன்று அனைத்து வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு நாளான இன்று (11.06.2026) நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், கலந்துக் கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இன்றையதினம் எரல் வட்டம், ஆழ்வார்திருநகரி உள்வட்டத்திற்குட்பட்ட மாவடிப்பண்ணை, குருகாட்டூர், மூக்குப்பீறி, கச்சனாவிளை ஆகிய கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 29 மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆராய்ந்து அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இதுவரை மொத்தம் 542 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஜமாபந்தியில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடி தீர்வாக இன்றையதினம் 09 பயனாளிகளுக்கு என இதுவரை மொத்தம் 45 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளையும், மேலும், 05 பயனாளிகளுக்கு தனிப்பட்டாக்கான ஆணைகளையும், 01 பயனாளிக்கு முதல் பட்டதாரி சான்றினையும், 02 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு திருமண உதவித்தொகையாக ரூ.8000/- க்கான ஆணையினையும் வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், வழங்கினார். 

இந்நிகழ்வில் அலுவலக மேலாளர் (பொது) ரகு, ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் வருவாய் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory