» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

வியாழன் 11, ஜூன் 2026 3:53:39 PM (IST)



தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் திடீரெனப் பலத்த காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இதமான குளிர்ச்சி நிலவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் அளவு சதமடித்துப் பொதுமக்களைக் கடுமையாக வாட்டி வதைத்து வந்தது. கத்திரி வெயில் முடிந்த பின்னரும் காற்றில் ஈரப்பதம் குறைந்து, அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை முதலே வானில் வழக்கமான வெயில் காணப்பட்டாலும், மதியத்திற்கு மேல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வானிலை திடீரென அதிரடி மாற்றம் கண்டது.

இன்று பிற்பகல் 1.20 மணியளவில் மாநகரின் வான்பரப்பில் திடீரெனக் கருகருவெனக் கார்மேகங்கள் சூழ்ந்து இருள் சூழ்ந்தது போல் காட்சியளித்தது. அதனைத் தொடர்ந்து, இடி-மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசத் தொடங்கியது. பிற்பகல் 1.20 மணிக்குத் தொடங்கிய இந்தத் திடீர் மழையானது, பிற்பகல் 2.00 மணி வரை சுமார் 40 நிமிடங்களுக்கு மாநகரப் பகுதிகள் முழுவதும் பரவலாக கொட்டித் தீர்த்தது.

திடீரெனப் பெய்த மழையினால் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், விவிடி சிக்னல், காய்கறி மார்க்கெட் பகுதி, டூவிபுரம், சிதம்பர நகர், பிரையண்ட் நகர் மற்றும் எட்டயபுரம் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள வணிக வளாகக் கடைகளின் நிழற்குடைகளில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்தனர்.

இருப்பினும், கடந்த பல நாட்களாக நீடித்து வந்த உக்கிரமான புழுக்கமும் வெயிலும் இந்த 40 நிமிடத் தொடர் மழையினால் முற்றிலும் தணிந்து, தூத்துக்குடி மாநகரம் முழுவதும் இதமான சீசன் போன்ற குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory