» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
வியாழன் 11, ஜூன் 2026 10:24:06 AM (IST)
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், உப்பளத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி கணேசபுரம், கீதா ஜீவன் நகரைச் சேர்ந்தவர் வேலு மகன் செல்வராஜ் (65). இவர் உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். செல்வராஜ் கடந்த 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு உப்பளப் பணிக்குச் சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் தனது எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை மற்றும் ஜார்ஜ் சாலை சந்திக்கும் பகுதிக்கு அருகே வந்துகொண்டிருந்த போது, அவருக்கு எதிரே மிக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம், செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற அந்த இருசக்கர வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









