» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் விவகாரத்தில் இளம்பெண் அடித்துக் கொலை : தற்கொலை நாடகமாடிய தாய், அண்ணன் கைது!
வியாழன் 11, ஜூன் 2026 8:38:39 AM (IST)

கயத்தாறு அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, சமூக வலைத்தளக் காதலைக் கண்டித்து, அண்ணனே தங்கையைக் கொலை செய்து விட்டுத் தற்கொலை நாடகமாடியதும், அதற்குத் தாய் உடந்தையாக இருந்ததும் அம்பலமானதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் பாலின் (36). இவருடைய 18 வயது மகள் கடந்த 9ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்டமாகச் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வழக்கில் கயத்தாறு போலீசார் மற்றும் தனிப்படையினர் மேற்கொண்ட தொடர் புலன் விசாரணை, உயிரிழந்த இளம்பெண்ணின் உடற்கூறாய்வு மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் இருந்து கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், அப்பெண்ணின் மரணத்தில் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் உடற்கூறாய்வு அறிக்கையில் முரண்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்த இளம்பெண்ணின் தாய் எஸ்தர் பாலின் மற்றும் அவரது அண்ணனான சிவஞானம் (20) ஆகிய இருவரையும் போலீசார் காவல் அரணுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
போலீசாரின் விசாரணையின் போது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய சிவஞானம் மற்றும் எஸ்தர் பாலின் ஆகிய இருவரும் இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி விபரங்கள் வருமாறு: உயிரிழந்த 18 வயது இளம்பெண், சமூக வலைத்தளம் மூலமாகச் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி, தீவிரக் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விபரத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணின் காதலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கண்டித்துள்ளனர்.
சம்பவத்தன்று இது தொடர்பாக வீட்டில் மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அண்ணன் சிவஞானம், தனது தங்கை என்றும் பாராமல் அப்பெண்ணை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், இந்தக் கொலையை மறைத்துச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகத் தாய் எஸ்தர் பாலினின் முழு உடந்தையுடன், இளம்பெண்ணின் சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் அக்குவேறு ஆணிவேறாக அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, சந்தேக மரண வழக்கை உடனடியாகக் கொலை வழக்காக மாற்றம் செய்த கயத்தாறு போலீசார், இளம்பெண்ணைக் கொலை செய்த அவரது அண்ணன் சிவஞானம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்து தற்கொலை நாடகமாடிய தாய் எஸ்தர் பாலின் ஆகிய இருவரையும் நேற்று உடனடியாக அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









