» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ. 75.25 லட்சம் மோசடி: கேரள ஆசாமி கைது!
புதன் 10, ஜூன் 2026 8:29:05 AM (IST)
தூத்துக்குடியில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடமிருந்து ரூ.75.25 லட்சம் பண மோசடி செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபரை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவருக்கு, வாட்ஸ்ஆப் செயலி மூலம் விடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் மிகக் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி வலைவீசியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய அந்த ஊழியர், ஆரம்பத்தில் சோதனை முயற்சியாக அந்த நபர் கூறிய கணக்கிற்கு ரூ. 300 அனுப்பியுள்ளார். அதற்குப் பிரதிபலனாக, மறுநாளே அவரது கைப்பேசி கணக்கிற்கு ரூ. 500 திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிக லாபம் கிடைக்கும் என முழுமையாக நம்பிய அந்தத் தனியார் நிறுவன ஊழியர், ஆன்லைன் வர்த்தகத்தில் இன்னும் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் 6 தவணைகளாக மொத்தம் ரூ. 75.25 லட்சத்தை அந்த நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், பெருந்தொகையை அனுப்பி ஒரு மாதமாகியும் முதலீடு செய்த பணத்திற்கான லாபமும் வரவில்லை; அசல் தொகை குறித்தும் எவ்வித தகவலும் இல்லை. தான் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஊழியர், இது குறித்துத் தூத்துக்குடி சைபர் கிரைம் பிரிவில் முறைப்படி புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்ப ரீதியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விரிவான விசாரணையில், மோசடி செய்தது கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த முகமது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேரளாவிற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், திருச்சூரில் பதுங்கியிருந்த குற்றவாளி முகமதுவை திங்கள்கிழமை (ஜூன் 8) கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









