» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் பள்ளி வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!
புதன் 10, ஜூன் 2026 8:24:18 AM (IST)
கோவில்பட்டி அருகே பள்ளி வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (48), தொழிலாளி. இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் முடுக்குமீண்டான்பட்டி பகுதியில் தங்கி வசித்து வந்தார். நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியிலிருந்து முடுக்குமீண்டான்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தார்.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே உள்ள அணுகு சாலையில் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு தனியார் பள்ளி வாகனம் எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராதாகிருஷ்ணன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இவ்விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனத்தின் ஓட்டுநரான முனியசாமி என்பவரைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









