» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது - 77 பாட்டில்கள் பறிமுதல்!

செவ்வாய் 9, ஜூன் 2026 8:46:20 PM (IST)



தூத்துக்குடியில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 77 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மைக்காலமாக 63 மதுபானக் கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மட்டும் 13 கடைகள் பூட்டப்பட்ட நிலையில், சில சமூக விரோதிகள் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்று ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், தூத்துக்குடி சிப்காட் காவல் எல்லைக்குட்பட்ட தனிப்பிரிவு அதிகாரிகள் பேச்சுமுத்து மற்றும் பலவேச பார்த்திபன் ஆகியோர் தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மடத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை மடக்கிப் பிடித்துச் சோதனை செய்தனர்.

அவரிடம் நடத்திய சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 52 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணையில், அவர் தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பெலிஸ் மகன் ராகுல் (20) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, திரேஸ்புரம் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டையில் மற்றொரு கைது:

இதேபோல், புதுக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் செபத்தியாபுரம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைப் பிடித்துச் சோதனை செய்ததில், அவரிடம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து, செபத்தியாபுரம் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டார். பிடிபட்ட நபர் செபத்தியாபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சாமிதுரை (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

வணக்கம் தமிழகம்Jun 11, 2026 - 08:27:02 AM | Posted IP 162.1*****

குடிமகன்கள் நலன் கருதி டாஸ்மாக் கடை இல்லாத பகுதிகளில் சேவை செய்ய வாங்கி சென்றுள்ளார் முதியோர் ஊணமுற்றோர் போன்றவர்கள் டாஸ்மாக் கடையை தேடி வந்து வரிசையில் காத்துநின்று வாங்க முடியுமா இப்போது பெண்களும் ஒரு சிலர் மது அருந்துகின்றனர் அவர்கள் டாஸ்மாக் கடையை தேடி வரமுடியுமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory