» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!

செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேட்டரி வண்டி ஓட்டுநர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் வழங்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில் வரும் ஜூன் 16 அன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேட்டரி வண்டி ஓட்டுநர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் வழங்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன் 16 அன்று தீர்ப்பு உத்தரவிற்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முக்கிய வழக்கு இன்று (09.06.2026) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூன்றாவது நீதிமன்ற அறையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சியில் நீதிபதி தண்டபாணி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி சம்பளம் வழங்கப்பட்டு வரும் தகவலும், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதே உத்தரவையும், அரசாணை எண்: 62-ஐயும் குறிப்பிட்டுச் சம்பளம் நிர்ணயித்துள்ள விபரங்களும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டன. மேலும், இவ்வழக்கு கடந்த 06.04.2026 அன்று அட்மிஷன் கட்டத்தில் வந்த போதே நீதிமன்றம் உத்தரவிடத் தயாராக இருந்த நிலையும் நீதிபதியின் கவனத்திற்கு முறைப்படி கொண்டு செல்லப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த ஒருசில நாட்களில் வழக்கை மீண்டும் பட்டியலிடலாமா என்று கேட்டார். உழைப்போர் உரிமை இயக்கத் தரப்பில் உள்ள நடைமுறை வசதிகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த வாரத்தில் வழக்கை வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வரும் 16.06.2026 அன்று "உத்தரவுக்காக என்ற தலைப்பில், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேட்டரி வண்டி ஓட்டுநர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் கோரும் இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வரவுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சகாயம், குமாரசாமி, ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர் என உழைப்போர் உரிமை இயக்கத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory