» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!

செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

திருச்செந்தூர் பகுதியில் நடைபெற்ற சில குற்றச் செயல்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரினை இணைத்துச் செய்திகள் வெளியாவதற்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பிரைட்டர் பாபு கடுமையான மறுப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்நிைலயில் திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு சில குற்றச் செயல்களில் கட்சியின் பெயரினை இணைத்துச் செய்திகள் வெளிவருவது மிகுந்த அதிர்ச்சியினையும், வருத்தத்தினையும் அளிக்கிறது. தலைவர் அவர்களை உண்மையாக நேசிக்கின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் இது போன்ற குற்றச் செயல்களுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன், போதையில்லா தமிழகம் மற்றும் இளைஞர்களின் நல்வாழ்வு ஆகியவற்றிற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இன்று தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

எனவே, எங்களின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கழகத் தோழர்கள் யாரும் எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், இக்குற்றச் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தவொரு உயர் பொறுப்புகளில் இருந்தாலும், காவல்துறை எவ்வித தயவு தாட்சண்யமும் பாராமல், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் காவல்துறை, குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மக்களின் இதய சிம்மாசனத்தில் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும் என்றும், கழகத்திற்குப் பெருமைக்குக் களங்கம் விளைவிக்க நினைக்கும் தீய சக்திகள் எப்பொழுதும் தோற்றுப் போவார்கள் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory