» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணைப் புகாரளிக்கக் கூடாது என தவெக எம்எல்ஏ மிரட்டுவதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில், தவெக இளைஞரணி நிர்வாகிகளால் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து காவல் துறையினரிடம் முறைப்படி புகாரளிக்கக் கூடாது என அப்பகுதி தவெக எம்எல்ஏ சரவணன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாகவும் வெளியாகியுள்ள செய்தி சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் பெண்களைப் பாலியல் ரீதியாக வேட்டையாடுவதிலும், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டிப் பணிய வைக்க முயல்வதிலும் ஆனானப்பட்ட திமுகவையே மிஞ்சிவிட்டது தவெக. ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் பொறுக்கியெடுத்து அமைச்சர் பதவியில் அமர்த்தினால், குற்றங்களை எப்படி ஒடுக்க முடியும்? குற்றவாளிகளுக்குத் தவறு செய்ய எப்படி பயமிருக்கும்?"
தொடர்ந்து தனது பதிவில் தவெக அரசின் செயல்பாடுகளைச் சாடியுள்ள அவர், "ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பிற்காகச் 'சிங்கப்பெண் படை' என்றெல்லாம் அமைப்பதாகப் பெரும் விளம்பரம் தேடிய முதல்வர் ஜோசப் விஜய், தற்பொழுது தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பாலியல் குற்றவாளிகளை வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் தவெக எம்எல்ஏ சரவணனைச் சட்டத்தின் முன் நிறுத்தி முறையாக விசாரித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் கடும் தண்டனைப் பெற்றுத் தருவதோடு, தனது கட்சியில் உள்ள குற்றப் பின்னணிக் கொண்ட சமூக விரோதிகளைத் தகுந்த கண்காணிப்பு வளையத்தில் வைக்க வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்" என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த அரசியல் குற்றச்சாட்டு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









