» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மீது டிஎஸ்பியிடம் புகார்!

புதன் 20, மே 2026 12:05:31 PM (IST)



"பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்களை ஒருமையில் அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மீது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.முத்துவேல் பாண்டி (எ) குட்டி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் "கடந்த மே 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் உடன்குடி பஜார் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் எதிரே திமுக சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் பேசிய திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, பொதுவெளியில் ஒருமையில் அவதூறாகப் பேசியுள்ளார்.

மேலும், எங்களது கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு மேலாண்மைச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவர்களைத் தூத்துக்குடிக்கு வந்தால் சட்டையைக் கிழிப்போம் என வன்முறையைத் தூண்டும் விதத்திலும் மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளார்.

இரு கட்சியினரிடையே கலவரத்தையும், பொது அமைதிக்குக் குந்தகத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டுப் பேசப்பட்ட இந்த அவதூறு உரைகளின் காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்பிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை உடனடியாக உள்கட்டமைப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory